Microwrorker
Microworkers.com on Facebook


Tuesday, August 5, 2008

First Meeting

முதல் சந்திப்பு

பார்வை பரிமாற
பத்திக்கொண்ட காதல்
பக்கம் அமர
பரவியது அதிர்வலைகள்
நெஞ்சு படபடக்க
நேசப் பேச்சும் எழவில்லை
நிலவியது மெளனமே
நகர மனமிலா
நீடித்த ஏகாந்த நிலையில்
தொடுவதற்கோ ஆசை
தொடாத தவிப்பில் அச்சம்
கரையும் நொடிகளுடன்
காலம் கடக்க
மெளனப் போராட்டமாய்
முடிந்தது முத்தான
முதல் சந்திப்பு

No comments: